Close

DADWO Hostel Admission

Publish Date : 06/06/2019

செ.வெ.எண்:-07/2019 நாள்:-05.06.2019

திண்டுக்கல் மாவட்டம்பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 36 ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவர்/மாணவியர் விடுதிகள், 2 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதிகள், 2 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி, 1 ஐ.டி.ஐ. மாணவர் விடுதி, துப்பரவு பணியாளர் மாணவர் விடுதி 1 மற்றும் 2 பழங்குடியினர் விடுதிகள், 6 பழங்குடியினர் நல உண்டி உறைவிடப்பள்ளி இயங்கி வருகின்றன.

2019-2020-ம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவ/மாணவியர்கள் தாங்கள் பயிலும் பள்ளிக்கு அருகாமையிலுள்ள மேற்கண்ட விடுதிகளில் தங்கிப்படிக்க விருப்பம் உள்ளவர்கள் விடுதியில் சேருவதற்கான விண்ணப்பங்களை அந்தந்த விடுதிக்காப்பாளர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட வேண்டும்.

விடுதியில் சேர்க்கப்படும் மாணவ/மாணவியர் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருப்பதை கட்டாயம் உறுதி செய்து கொள்ள வேண்டும். விண்ணப்படிவத்தில் மாணவ/மாணவியரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு அதில் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களின் சான்றொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும். விடுதியில் தங்கிப்பயிலும் மாணவஃமாணவியருக்கு கட்டாயமாக ‘வங்கிக்கணக்கு” துவக்கப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில்; ‘ஆதார் கார்டு எண்“ கட்டாயம் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பள்ளி விடுதியில் சேர விரும்பும் மாணவ/மாணவியர்கள் இம்மாதம் 14.06.2019 க்குள்ளும், கல்லூரி விடுதியில் சேர விரும்பும் மாணவ/மாணவியர்கள் ஜுலை 01.07.2019 க்குள்ளும் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.