Excise prohibition Awareness on illicit arrack

செ.வெ.எண்:-37/2021
நாள்:20.10.2021
மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள்
திண்டுக்கல் மாவட்டம், பேருந்து நிலையத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.சீனிவாசன்,இ.கா.ப., அவர்கள், முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(20.10.2021) மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
கள்ளச்சாராயம் மற்றும் மது அருந்துவதால், கணவன், மனைவி சண்டை சச்சரவுகள், விவாகரத்துப் பிரச்சனைகள், குடும்பத்தில் அக்கறை இன்மை, வேலை செய்ய இயலாமை, வேலையின்மை, வேலையிழப்பு, பொருளாதாரப் பிரச்சனைகள், கடனாளி ஆகுதல், அதிக செலவு செய்தல், ஏளனப் பேச்சுகள், மரியாதை குறைவு போன்ற சமுதாய பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மேலும், கல்லீரல் வீக்கம், மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோய், வயிற்றுப்புண், கணயத்தில் வீக்கம், புற்றுநோய், தொண்டை உணவுக்குழாய் மற்றும் குடல் சத்துக் குறைபாடுகள், உடல் வீக்கம், சர்க்கரை வியாதி, இருதய வீக்கம், கை, கால் செயல் இழத்தல், நரம்புத்தளர்ச்சி, மூளை பாதிப்புகள், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, இரத்த சோகை, ஆண்மையிழப்பு போன்ற உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படுகிறது.
தூக்கமின்மை, மனச்சோர்வு, பதட்டம், தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி ஆளுமைத் தன்மை மாற்றம், ஞாபக மறதி, வலிப்பு நோய், மாயத்தோற்றங்கள் போன்ற மனரீதியானப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே, மது மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தும் பழக்கத்தை கைவிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவி;த்தார்கள்.
இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் மதுபானம் மற்றும் கள்ளச்சாரயத்திற்கு எதிரான கள்ளச்சாராயம் மற்றும் போதை மருந்துகள் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு வாகனத்தினை கொடியசைத்து துவங்கி வைத்து, துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி ம.காசிசெல்வி அவர்கள், உதவி ஆணையர் (கலால்) திரு.ச.சிவக்குமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.இந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.