02.06.2022- Jamabanthi Petitions – Dindigul East Taluk

செ.வெ.எண்:-06/2022
நாள்:02.06.2022
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் அலுவலத்தில் வருவாய் தீர்வாயம் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 1431-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 01.06.2022 அன்று தொடங்கியது. திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்ஃமாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா தலைமையில் திண்டுக்கல் (கிழக்கு) வட்டம், சாணார்பட்டி குறுவட்டத்திற்குட்பட்ட, கூவனூத்து, வடகாட்டுப்பட்டி, விராலிப்பட்டி, தவசிமடை, எமக்கலாபுரம், தி.பஞ்சம்பட்டி, சாணார்பட்டி, கோணப்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, கோம்பைபட்டி, வேம்பார்பட்டி ஆவிளிப்பட்டி ஆகிய 12 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 69 மனுக்கள் பெறப்பட்டன.
அதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று(02.06.2022) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.இரா.அமர்நாத் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. சிலுவத்தூர் குறுவட்டத்திற்குட்பட்ட வீரசின்னம்பட்டி, ராகலாபுரம், ராஜக்காபட்டி, மடூர், சிலுவத்தூர், வத்தலதொப்பம்பட்டி, தேத்தாம்பட்டி, வங்கமனூத்து ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இன்று பொதுமக்களிடமிருந்து 32 மனுக்கள் பெறப்பட்டன.
திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திரு.அபுரிஸ்வான், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.