Close

03.06.2022-The Hon’ble Food and Civil Supplies Minister-Kalaignar Birthday – Oddanchatram

Publish Date : 04/06/2022
.

செ.வெ.எண்:-08/2022

நாள்:03.06.2022

திண்டுக்கல் மாவட்டம்

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், தீவிர தூய்மைப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி ஆகியவற்றை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி;யில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், தீவிர தூய்மைப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி ஆகியவற்றை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தொடங்கி வைத்தார்.

ஒட்டன்சத்திரம் நகராட்சி, சின்னக்குளம் பகுதியில் ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’, ‘எனது குப்பை எனது பொறுப்பு’ உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, சின்னக்குளம் பகுதியில் ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’ சுவச்சத்தா செயலி நிறுவுதல், மரக்கன்றுகள் நடவு செய்தல், விழிப்புணர்வு பேரணி, பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணி விழிப்புணர்வு தொடர்பான ஓவியம் வரைதல், காந்தி தினசரி மார்க்கெட்டில் சிறப்பு தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்மிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் தமிழக மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து கடைகோடி மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், முன் செயாக்கத் திட்டம், ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற தலைப்பில் உறுதிமொழியேற்கப்பட்டுள்ளது. நகரையும், வீட்டின் சுற்றுப்புறத் தூய்மையையும் பராமரிப்பது அனைவரது கடமை ஆகும். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் குப்பைகளை குவித்து, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தெடுக்க 20 ஏக்கர் நிலத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை சுற்று சுற்றுச்சுவர் அமைக்க ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க ரூ.930 கோடி மதிப்பீட்டில் ஆழியாறு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. பரப்பலாறு அணை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாட்டின் வனப்பரப்பு 33 சதவீதம் இருக்க வேண்டும். அதேபோல் தமிழகத்தின் வனப்பரப்பு 33 சதவீதம் மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று மட்டும் 5,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன. மேலும், ஒட்டன்சத்திரம் தொகுதியில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மரம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் என்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கூறியுள்ளதன்படி, மரம் வளர்ப்பதன் மூலம் நமது வருங்கால சந்ததியினருக்கு தூய்மையான சுற்றுப்புறச்சூழலை நாம் வழங்க முடியும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி மேம்பாட்டிற்காக 5 கல்லூரிகள், ஒரு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு கல்லூரியாக தொடங்கப்பட்டு வருகிறது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அரசு கல்லூரி என்ற வகையில் நத்தம் தொகுதிக்கும் ஒரு அரசுக்கல்லூரி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உயர்கல்வித்துறை சார்பில் கள்ளிமந்தையத்தில் இந்த ஆண்டு கல்லூரி தொடங்கப்படும். ஒட்டன்சத்திரத்தில் விரைவில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் வகையில் ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரியில் 04.06.2022 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமி நடைபெறுகிறது. அதில 400க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. படித்த இளைஞர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயன்பெற வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திரு.க.திருமலைசாமி, துணைத்தலைவர் திரு.ப.வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையாளர் திருமதி பா.தேவிகா, கல்லூரி மாணவ, மாணவிகள், தூய்மைப் பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.