10, 11 and 12 Govt Exam 05.05.2022 To 31.05.2022
செ.வெ.எண்:-06/2022
நாள்:03.05.2022
திண்டுக்கல் மாவட்டம்
10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் 05.05.2022 முதல் 31.05.2022 வரை நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள பழனி, திண்டுக்கல், வத்தலக்குண்டு, வேடசந்தூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் 05.05.2022 முதல் 31.05.2022 வரை நடைபெறவுள்ளது.
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வுகள் 85 தேர்வு மையங்களிலும், தனித்தேர்வுகளுக்காக தனியே 3 தேர்வு மையங்களிலும் நடைபெறவுள்ளது. இடைநிலை பொதுத் தேர்வுகள் மொத்தம் 113 தேர்வு மையங்களிலும், தனித்தேர்வர்களுக்காக தனியே 5 தேர்வு மையங்களிலும் நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வினை 212 பள்ளிகளில் பயிலும் 10646 மாணவர்கள் மற்றும் 11429 மாணவிகள் மொத்தம் 22075 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். மேல்நிலை முதலாமாண்டு தேர்வினை 215 பள்ளிகளில் பயிலும் 12020 மாணவர்கள் மற்றும் 12447 மாணவிகள் மொத்தம் 24467 தேர்வர்கள் தேவெழுதவுள்ளனர். மேலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இடைநிலைப் பொதுத் தேர்வினை 14117 மாணவர்கள் மற்றும் 13244 மாணவிகள் மொத்தம் 27361 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். இத்தேர்வுகளை கண்காணிக்க நிலையான படையினரும், பறக்கும் படையினரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனார் என திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.சீ.கருப்புசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.