Close

100% for Women Subsidy scheme – Animal Husbandry Department

Publish Date : 06/12/2021

செ.வெ.எண்:-11/2021

நாள்:04.12.2021

ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள்/கணவனால் கைவிடப்பட்ட/ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில், ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள்/கணவனால் கைவிடப்பட்ட/ஆதரவற்ற பெண்களுக்கு, 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள் /செம்மறியாடுகள் வழங்கி, பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம், 2021-2022-ஆம் ஆண்டிற்கு, தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 1,400 பெண்கள் பயன்பெறவுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிப்பவர்கள், அந்தந்த கிராம ஊராட்சிகளில் நிரந்தர முகவரியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவர். நிலமற்ற விவசாயக்கூலி வேலை செய்யும் பெண்கள். (குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் சொந்தமாக நிலம் இல்லாதிருத்தல் வேண்டும்.) 60 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். தற்போது சொந்தமாக கறவை பசு அல்லது வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் ஏதும் இல்லாதவராக இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் நபரோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களோ தற்போது மத்திய அரசிலோ அல்லது மாநில அரசிலோ அல்லது கூட்டுறவுத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் ஏதேனும் பதவியிலோ இல்லாதவராக இருத்தல் வேண்டும். 29 சதவீதம் SC பயனாளிகள், 1 சதவீதம் ST பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியான பெண்கள், தங்கள் கிராம ஊராட்சிக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துரை அணுகி 10.12.2021-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.