Close

SVEEP Awareness

Publish Date : 23/03/2019
mvm

செ.வெ.எண்:-30/2019  நாள்:-23.03.2019

mvm2m

திண்டுக்கல் மாவட்டம்வாக்கின் வலிமை குறித்து இளம் வாக்காளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் – தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவியர்களிடையே மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் பேச்சு.

திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரியில் பல்வேறு கல்லூரிகளிடையே தேர்தல் விழிப்புணர்வு குறித்து நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

வலிமையான ஜனநாயகத்தை உருவாக்க நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும். தேர்தல் நியாயமான முறையிலும், நேர்மையான முறையிலும், நடைபெறுவதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள். இதே போன்று நாடு முழுவதும் இலட்சக்கணக்கான அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தேர்தல் பணி என்பது ஒவ்வொரு காலகட்டத்திற்கு மாறுப்பட்டு வருகிறது. முன்பு கள்ள ஓட்டு போட்டதாக செய்திகள் வந்தது உண்டு. தற்போது உள்ள தேர்தல் நடைமுறையில் அதற்கு வாய்ப்பு இல்லை. அதேபோன்று வாக்கு சீட்டில் பதிவு செய்து வந்த நமது வாக்கு, தற்போது வாக்கு பதிவு செய்யும் இயந்திரம் மூலமாக வாக்கினை செலுத்துகிறோம். இதிலும், சிலர் சந்தேகங்களை எழுப்பிதால் இந்திய தேர்தல் ஆணையம் ஏஏPயுவு என்னும் வாக்கு உறுதி செய்யும் இயந்திரம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது வாக்காளர்களுக்கு சந்கேங்களுக்கு இடமின்றி வாக்களிக்கும் உரிமையை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.

ஆகவே, இளம் வாக்காளர்கள் தங்கள் ஒரு வாக்கின் வலிமை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சில உதாரணங்களை கூற முடியும். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கிய ஒருவர் ஒரு வாக்கில்; தோல்வியுற்றார். இதனால் அவர், அந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பை இழந்தார். இதுபோன்று ஒரு வாக்கினால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பல உதாரணங்கள் உண்டு. ஒரு வாக்கின் வலிமை குறித்து இளம் வாக்காளர்கள் தெரிந்து கொண்டு 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்.

ஏப்ரல் 18 அன்று, உங்கள் அனைவருக்கும் எந்த வேலைகள் இருந்தாலும் வாக்கு மையத்திற்கு; சென்று வாக்களிப்பதற்கு நேரத்தை ஒதுக்கி வாக்களித்து நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். அதேபோன்று உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும், நண்பர்கள் மற்றும் உறவினர்களையும், வாக்களிக்கச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

தேர்தல் விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி, ரங்கோலி போட்டி, மேடை நாடகம் மற்றும் விவாதப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,இ.ஆ.ப., அவர்கள் பரிசுகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., எம்.வி.எம். கல்லூரி முதல்வர் திருமதி.லதா, திண்டுக்கல் (மேற்கு) வட்டாச்சியர் திருமதி.லெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்