Close

Kodai vizha Precautionary Meeting

Publish Date : 27/05/2019
1

2

செ.வெ.எண்:-20/2019 நாள்:- 27.05.2019
திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானலில் கோடைவிழா 2019 மற்றும் மலர் கண்காட்சி தொடக்க விழா நடத்துவது தொடர்பாக, துறைவாரியான அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா 2019 மற்றும் மலர் கண்காட்சி தொடக்க விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், இன்று (27.05.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடைவிழா நடத்துவது தொடர்பாகவும், அதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்திட, துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொடைக்கானலின் பல்வேறு பகுதிகளில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கோடைவிழாவை முன்னிட்டு, தோட்டக்கலைத்துறையின் சார்பில் பிரையண்ட் பூங்காவில் அரிய வகையிலான மலர்களை கொண்டு எழில்மிகு மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறை வசதிகள் மற்றும் சுகாதாரத்தை பேணும் வகையில் கிருமி நாசினிகள் தெளித்து சுத்தமாக வைத்திருக்க நகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானல் பகுதியில் சுகாதாரமான முறையில் உணவு பொருட்கள் வழங்கவும், காலவதியான உணவு பொருட்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கொடைக்கானல் – பழனி சாலை மற்றும் கொடைக்கானல் – வத்தலக்குண்டு சாலைகளை சீரமைத்து ஆபத்தான வளைவுகளில் எச்சரிக்கை அறிவிப்பு மற்றும் ஒளிரும் விளக்குகளை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினருக்கும், சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கு பாதுகாப்பான வாகனங்கள் நிறுத்தும் இடத்தை ஏற்படுத்தித் தர தொடர்புடைய அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டு, போக்குவரத்தை சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொடைக்கானல் பகுதியில் தங்கும் விடுதி, உணவு விடுதி ஆகியவைகளில் அதிக கட்டணம் வசுலித்தால், சுற்றுலா பயணிகள்; மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக றாயவ’ள யிp எண்: 7598866000-ல் புகார் அளிக்கலாம். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், கோடைவிழா நடைபெறும் நாட்களில் தீயணைப்பு வாகனங்களுடன் மீட்பு பணியாளர்களை நியமித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படத்தவும், மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம்கள் அமைத்து தேவையான இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோடைவிழாவையொட்டி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல வசதியாக கூடுதலாக பேருந்துகளை இயக்கிடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடைவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் முழு ஒத்துழைப்பு அளித்து கோடைவிழாவினை சிறப்பாக நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.அ.வே.சுரேந்திரன், மாவட்ட வன அலுவலர் திருமதி.சி.வித்யா.இ.வ.ப, நகராட்சி ஆணையர் திரு.ரா.முருகேசன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.மாலதிபிரகாஷ், துணை இயக்குநர்கள் (தோட்டக்கலைத்துறை) திரு.நாராயணசாமி, திரு.சீனிவாசன், சுற்றுலா அலுவலர் திருமதி.உமாதேவி, வட்டாட்சியர் திரு.அ.வில்சன் தேவதாஸ் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.