Close

DSWO DEPT (Sewing Machine)

Publish Date : 03/06/2019

செ.வெ.எண்:-03/2019 நாள்:-03.06.2019

திண்டுக்கல் மாவட்டம்

சத்தியாவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்; கீழ் தகுதியுடைய பெண்களுக்கு, தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 2019-20 ஆம் நிதியாண்டில் சத்தியாவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்; கீழ், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு தையல் இயந்திரம் பெற கீழ்க்கானும் தகுதி உள்ளவர்கள் திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 30.06.2019- க்குள் விண்ணப்பிக்கலாம்.
1. வருமானச் சான்று ரூ.72,000/-த்திற்குள் இருத்தல் வேண்டும். வருமானச் சான்று விண்ணப்பிக்கும் தேதிக்கு முன்னரே இருக்க வேண்டும்.

2. பிறந்த தேதிக்கான வயதுச் சான்று அல்லது கல்வி சான்று வேண்டும் (வயது 20 முதல் 40 வரை இருத்தல் வேண்டும்)

3. விதவையாயின் அதற்கான சான்று இணைக்க வேண்டும்.

4. ஜாதிச் சான்று இணைக்க வேண்டும்.

5. கணவரால் கைவிடப்பட்டவராயின் அதற்கான சான்று இணைக்க வேண்டும்;

6. தையல் தெரியும் என்பதற்கான சான்று குறைந்தது 6 மாத சான்று (இணைக்கப்பட வேண்டும்)

7. பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம்-3

8. பிறப்பிடச்சான்று

9. ஆதார் சான்று

10.வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர் எனில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர் சான்று (கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும்)

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம்,அறை எண்.88,தரைதளம்,மாவட்ட ஆட்சியர் வளாகம்,திண்டுக்கல். தொலைபேசி எண்.0451-2460092 தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.