Close

Govt Welfare Measures

Publish Date : 02/07/2019
gdp1

செ.வெ.எண்:- 2/2019 நாள்:01.07.2019

gdp2

 

திண்டுக்கல் மாவட்டம் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.60 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித்தலைவராக இன்று (01.07.2019) திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், திங்கள் கிழமை தோறும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய தினம்; மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களை பெற்றுக்கொண்டும், இதற்கு முன் பெறப்பட்ட மனுக்களின் மீதும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், அந்தந்த வட்டார அளவில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை, எந்தவித காலதாமதமுமின்றி, உடனுக்குடன் மனுக்களை பரிசீலனை செய்து, தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.52,840 மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் 2 மாற்றுத்திறாளிகளுக்கு ரூ.3500 மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.17 ஆயிரம் மதிப்பீட்டில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையும் என மொத்தம் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.60 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்.

இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட 577 மனுக்களையும் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட 16 மனுக்களையும் தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கி, தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திருமதி.கவிதா, தனித்துணை ஆட்சியர் (சமூகப்பாதுகாப்புத்திட்டம்) திரு.சிவக்குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.