Close

75 Independence Day – Celebration

Publish Date : 18/04/2022
.

செ.வெ.எண்:-43/2022

நாள்:17.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி திருப்பூர் குமரன் பூங்கா திடலில் 75வது சுதந்திர தின விழா, சுதந்திர திருநாள் அமுத பெருவிழா, பல்துறை பணி விளக்க கண்காட்சி கலைநிகழ்ச்சிகளுடன் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 75-வது சுதந்திர தினவிழா, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா, பல்துறை பணி விளக்க கண்காட்சி, திண்டுக்கல் மாநகராட்சி திருப்பூர் குமரன் பூங்காவில் 15.04.2022 அன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் கலந்துகொண்டு பல்துறை பணிவிளக்க கண்காட்சியை திறந்து வைத்து, அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கலந்துகொண்டு அரசுத்துறை அரங்குகளை திறந்து வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.கண்காட்சி 21.04.2022 வரை தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது. கண்காட்சியில், தினமும் மாலை 4 மணி முதல் பல்சுவை கலைநிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நாடகங்கள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கண்காட்சியை காண நுழைவுக்கட்டணம் இல்லை. கண்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன.கண்காட்சியில் முதல் நாள் திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் எம்எஸ்பி சோலைநாடார் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் எஸ்எம்பிஎம் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இல்லம் தேடி கல்வி ) கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள், கலைமாமணி எம்எஸ்பி தங்கவேல் குழுவினரின் பறையாட்டம்(பெண் குழுவினர்) நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரண்டாம் நாள்(16.04.2022) திண்டுக்கல் நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி(இல்லம் தேடி கல்வி) கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள், சவகர் சிறுவர் மன்றம்(பரத நாட்டியம்) கலை மாமணி எம்எஸ்பி தங்கவேல் குழுவின் பல்சுவை கலை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

மூன்றாம் நாளான இன்று(17.04.2022) திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இல்லம் தேடி கல்வி ) கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள், சவகர் சிறுவர் மன்றம் கலைமாமணி தங்கவேல் குழுவின் பல்சுவை கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறவுள்ளன.நான்காம் நாள்(18.04.2022) கொழிஞ்சிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, கமலாபுரம் திரவியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இல்லம் தேடி கல்வி ) கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள் சவகர் சிறுவர் மன்றம் கலை நிகழ்ச்சிகள் கலைமாமணி விஎம் முருகப்பா குழுவினர் – சுதந்திரத்தில் தமிழகத்தின் பங்கு – நாடகம் ஆகியவை நடைபெறவுள்ளன.

ஐந்தாம் நாள்(19.04.2022) பாலசமுத்திரம அரசு மேல்நிலைப்பள்ளி,; வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பாட்டு), பூத்தாம்பட்டி ஆர்சி நடுநிலைப்பள்ளி (நாடகம்), அழகாபுரி அரசு மேல்நிலைப்பள்ளி (மௌன மொழி நாடகம்), மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இல்லம் தேடி கல்வி) கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள், சவகர் சிறுவர் மன்றம் கலை நிகழ்ச்சிகள், கலைமாமணி விஎம் முருகப்பா குழுவினர் – இந்திய சுதந்திர போராட்டம் – காந்தியடிகள் – நாடகம் ஆகியவை நடைபெறவுள்ளன.ஆறாம் நாள்(20.04.2022) சேர்வைக்காரன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, (பாட்டு), மாத்தினிப்பட்டி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, (பாட்டு), அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பு.குரும்பப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, (மௌனமொழி நாடகம்), சி.அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொக்கப்பள்ளி, காசிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, (நாடகம்), கோனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, (நாடகம்), சுள்ளெறும்பு அரசு மேல்நிலைப்பள்ளி, (நாடகம்), திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, (தனிநடிப்பு), மாரம்பாடி சிறுமலர் ஆரம்பபள்ளி, (வில்லுப்பாட்டு), மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி(இல்லம் தேடி கல்வி) கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள், சவகர் சிறுவர் மன்றம் கலை நிகழ்ச்சிகள் கலைமாமணி விஎம் முருகப்பா குழுவினர் – வீரபாண்டிய கட்ட பொம்மன் – நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.ஏழாம் நாள்(21.04.2022) திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இல்லம் தேடி கல்வி) கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள், சவகர் சிறுவர் மன்றம் கலை நிகழ்ச்சிகள், கலைமாமணி தங்கவேல் குழுவினர் – கரகாட்டம் – தப்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இந்தக்கண்காட்சியில், செய்தி மக்கள் தொடர்புத் துறை, வருவாய்த்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, வேளாண்மை வணிகத்துறை, சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந் குழந்தை வளர்ச்சித் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, மகளிர் திட்டம், ஊரக புத்தாக்கத் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பேரூராட்சிகள் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட திறன் மேம்பாடு, முன்னோடி வங்கி, சுற்றுலாத்துறை, ஆவின், திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், காவல் துறை ஆகிய துறைகள் சார்பில் தனித்தனி அரங்குகளில் அந்தந்த துறைகளில் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் துறை அலுவலர்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.செய்தி மக்கள் தொடர்புத் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில்; அரசின் திட்டங்களை அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பொதுமக்கள் குடும்பத்துடன் பார்வையிட்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளை அறிந்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.