AC joining

செ.வெ.எண்:-30/2025
நாள்:-11.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியராக (பயிற்சி) மரு. ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியராக(பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தந்தை டாக்டர் வி.ஜே.சந்திரன், இ.கா.ப., ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி. தாயார் திருமதி ச.உமாமகேஸ்வரி, எம்.பி.ஏ., பட்டதாரி ஆவார். கணவர் மரு.பார்த்திபன், எம்.பி.பி.எஸ்., எம்.டி., அனஸ்தீசியா படித்துள்ளார். மகன் சாத்விக். உதவி ஆட்சியர்(பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., அவர்கள் புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்டவர். புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்றவர். பரதநாட்டியம், கர்நாடக இசையில் நுண்கலைகளில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். சமூக மருத்துவத் துறையில் ஜூனியர் ரெசிடென்ட் டாக்டராக பணியாற்றினார். இந்திய ரயில்வே மேலாண்மை சேவையில் பணியாற்றியுள்ளார்.
பின்னர் 2024-ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணி தேர்வில் தேர்ச்சி பெற்றார். தற்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக(பயிற்சி) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10.06.2025 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.