Close

AC(Excise)-Meeting

Publish Date : 23/09/2021

செ.வெ.எண்:-43/2021

நாள்:23.09.2021

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்களால் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் சிறப்பு பறக்கும்படை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்களால் 12.09.2021-ம் தேதியன்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள்,மாவட்ட மேலாளர்கள் மற்றும் சிறப்பு பறக்கும்படை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் அமைச்சர் அவர்களால் கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

• டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் அனுமதிக்கப்பட்ட பணி நேரத்தில் மட்டுமே செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

• மதுபானங்கள் அனைத்தும் மதுபானக் கடைகளில் மட்டுமே விற்கப்பட வேண்டும் எனவும், மதுக்கூடங்கள் அல்லது மற்றக் கடைகளில் விற்கப்படுகிறதா எனக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

• மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது எனவும் அவ்வாறு கூடுதல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்மந்தப்படட கடைப் பணியாளர்கள் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

• தற்போழுது மதுக்கூடங்கள் செயல்பட அரசால் அனுமதி வழங்கப்படவில்லை. அரசினால் அனுமதி வழங்கப்படும் வரை மதுக்கூடங்கள் கண்டிப்பாக செயல்படக்கூடாது. ஏதேனும் மதுக்கூடங்கள் செயல்படுவது தெரியவரின் சம்மந்தப்பட்ட கடையின் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதுடன் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

• டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளின் சுற்றுப்புறம் சுகாதாரமான நிலையிலும் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

• மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் நுகர்வோரின் பார்வைக்கு தெரியும் வண்ணம் வைக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

• டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் அமையப்பெற்றிருந்தால் அதனைக் கண்டறிந்து உடனடியாக மாற்று இடம் தேர்வு மாற்றம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

• அரசுக்கு நற்பெயர் விளைவிக்கும் வகையில் அனைத்து அலுவலர்களும் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே டாஸ்மாக் நிறுவனத்திற்கு நற்பெயர் கிடைக்கும்.

• டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைக்கு ஒரு நுழைவு வாயில் (Single Shutter) மட்டுமே அமைத்திருத்தல் வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. மதுபான சில்லறை விற்பனைக் கடையுடன் இணைந்துள்ள மதுக்கூடத்திற்கு கடையுடன் மற்றொரு நுழைவு வாயில் இருப்பின் அதனை மூடிட நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

• வெளி மாநில மதுபான வகைகள் ஏதேனும் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்