Close

AD CENTER (PMNAM MELA )

Publish Date : 09/02/2024

செ.வெ.எண்:-20/2024

நாள்:-08.02.2024

திண்டுக்கல் மாவட்டம்

பிரதான் மந்திரி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 12.02.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

இந்திய அரசு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் இயக்குநரகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக, மதுரை மண்டல அளவிலான தொழிற்பயிற்சி நிலையங்கள் இணைந்து Pradhan Mantri National Apprenticeship Mela (PMNAM)-2024 தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் திண்டுக்கல், நத்தம் ரோடு, குள்ளனம்பட்டியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 12.02.2024 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் மதுரை மண்டல அளவில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் அரசு மற்றும் தனியார் தொழில்நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தொழிற்பிரிவுகளில் தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க, பயிற்சியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் ITI படித்த ஆண் / பெண் இருபாலரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தற்போது தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூபாய் 8050/- முதல் 12000/- வரை வழங்கப்படும்.

எனவே இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காத அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் ஆண் / பெண் இருபாலரும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் அவர்களை 0451-2970049 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.