Close

AD-DECGC DINDIGUL ( ODC Christian Polytechnic College Free Coaching Classes)

Publish Date : 24/05/2023

செ.வெ.எண்:-42/2023

நாள்:-24.05.2023

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2023-ஆம் ஆண்டிற்கான தொகுதி-II மற்றும் தொகுதி-IV தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரியில் 29.05.2022 அன்று முதல் நேரடியாக நடத்தப்பட உள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒட்டன்சத்திரம், கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசுப் பணிக் காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு மாதிரித் தேர்வுகளும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2023-ஆம் ஆண்டிற்கான கால அட்டவணையின்படி நடத்தப்படவுள்ள, தொகுதி-II மற்றும் தொகுதி-IV-தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரியில் 29.05.2022 அன்று முதல் நேரடியாக நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0451-2904065 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.