Close

AD-DECGC DINDIGUL ((Sub-Inspector of Police (Taluk, AR & TSP)

Publish Date : 24/05/2023

செ.வெ.எண்:-43/2023

நாள்:-24.05.2023

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் (Sub-Inspector of Police (Taluk, AR & TSP) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக, இலவசப் பயிற்சி வகுப்புகள் 12.05.2023 அன்று முதல் நடத்தப்பட்டு வருகிறது. – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் / தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படும் பல்வேறு பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தன்னார்வப் பயிலும் வட்ட நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்குரிய மாத இதழ்கள், செய்தித் தாள்கள் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு வேண்டிய புத்தகங்கள் உள்ளன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட்டு, மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது, தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் (Sub-Inspector of Police (Taluk, AR & TSP) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக, இலவசப் பயிற்சி வகுப்புகள் 12.05.2023 அன்று முதல் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் திண்டுக்கல் மாவட்டத்தினைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் .மேலும், விவரங்களுக்கு அலுவலகத் தொலைபேசி எண் 0451-2904065 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.