AD Fisheries Dept (IAS Coaching)
செ.வெ.எண்:-66/2021
நாள்:26.12.2021
மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது –
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித்தேர்வில் சிறப்பிக்க, சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆயத்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி (Guidelines) விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து 28.12.2021 அன்று மாலை 6.00 மணிக்குள் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்திட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், 80அடி ரோடு, நேருஜி நகர், திண்டுக்கல் – 624001 என்ற முகவரியிலும், 0451-2900148 என்ற அலுவலக தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.