Close

AG Meeting

Publish Date : 28/04/2022
.

செ.வெ.எண்:-75/2022

நாள்:26.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில கணக்காயர் தணிக்கைத்தடை நீக்க கூட்ட அமர்வு மாநில முதன்மை கணக்காயர் திரு.ஆர்.அம்பலவாணன், IA&AS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(26.04.2022) மாநில கணக்காயர் தணிக்கைத்தடை நீக்க கூட்ட அமர்வு மாநில முதன்மை கணக்காயர் திரு.ஆர்.அம்பலவாணன், IA&AS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்ட அமர்விற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு கணக்குத்தலைவர் திரு.அம்பலவாணன் அவர்கள் பேசியதாவது:-

நமது நாட்டில் கிராமப்பகுதிகள் அதிகளவில் உள்ளன. கிராமப்புறங்கள் வளர்ச்சியில் தமிழகம் சிறப்பாக வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழகத்தில் முந்தைய காலங்களிலே கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்துள்ளனர். தமிழகத்தின் வளர்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறைக்கு அதிக பங்குள்ளது. ஊரக வளர்ச்சித்துறையினருக்கு அதிக சவால்கள் உள்ளது. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தல், வளங்களை பராமரித்தல் ஆகியவைகளை அரசின் நிதியைக் கொண்டு, சரியாக கையாளுவது மிக முக்கிய பணியாகும். மாண்மிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், பல்வேறு நிதிகளைக் கொண்டு அடிப்படைத் தேவைகளை முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழுக்களை அமைத்துள்ளார்கள்.தணிக்கை என்பது நிதிச்செலவினங்களை முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதாகும். தணிக்கைக்காக பயப்படுவது தேவையற்ற ஒன்றாகும். ஒவ்வொரு பணிகளையும் மேற்கொள்ளும்போது, அப்பணிகளுக்கான ஆவணங்களை முறையாக செய்து, அவைகளை பாதுகாத்து வைப்பது அவசியமாகும். எந்தப் பணிகளை மேற்கொண்டாலும், அதில் தரம் முதன்மையானதாக இருக்க வேண்டும். தரமான பொருட்களை வாங்குவதுடன், அவைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். தரம் குறைந்த பொருட்களையும் முறையாக பணிகளை மேற்கொள்ளாத நிலையில் பல நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும். வாங்கும் பொருட்கள் அனைத்தையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். கிராம அளவில் சமுதாயக்கூடம், குடிநீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு விதமான சொத்துக்கள் இருப்பதை கணக்கீடு செய்து, அவைகளை முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும். தணிக்கை தொடர்பாக தாங்கள் அளிக்கும் பதில்களுக்கான ஆவணங்கள் கோப்புகளில் இருக்க வேண்டும். முறையான ஆவணங்களுடன் பதில் அளித்தால் தணிக்கை தடைகள் தீர்த்து வைக்கப்படும். இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்தில், மாநில துணை கணக்காயர் திரு.பீட்டர் அந்தோணிராஜ், மதுரை கிளை அலுவலக முதுநிலை கணக்கு அலுவலர் திரு.ஏ.பி.இளையகுமார், உதவி இயக்குநர்(தணிக்கை) திரு.அன்புமணி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.