Close

Agri Building Inauguration

Publish Date : 10/01/2022
.

.

செ.வெ.எண்:-19/2022

நாள்:08.01.2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் வேடசந்தூர் வட்டம், சேணன்கோட்டையில் முதன்மை பதப்படுத்தும் மையம், குளிர்பதன கிடங்கு மற்றும் சிப்பம் கட்டும் மையத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், சேணன்கோட்டையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில், முதன்மை பதப்படுத்தும் மையம், குளிர்பதன கிடங்கு மற்றும் சிப்பம் கட்டும் மையத்தினை காணொலி காட்சி வாயிலாக இன்று (08.01.2022) திறந்து வைத்தார்கள். அதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்.இ.ஆ.ப அவர்கள் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன் அவர்கள் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சார்பில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், சேணன்கோட்டையில், நபார்டு நிதி உதவி (2018-2019) விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தின்கீழ், முதன்மை பதப்படுத்தும் மையம் 1000மெ.டன் குளிர்பதன கிடங்கு மற்றும் சிப்பம் கட்டும் அறை ரூ.416 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடம் மற்றும் கவுஞ்சி முதன்மை பதக்படுத்தும் மையத்தில் பூண்டிற்கான புகையூட்டும் 500மெ.டன் கட்டடம், 1000மெ.டன் சேமிப்பு கிடங்கு ரூ.844 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.

அதனை தொடர்ந்து, வேடசந்தூர் வட்டம், சேணன்கோட்டையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட 1000 மெ.டன் கிட்டங்கி மற்றும் முருங்கை பதப்படுத்தும் நிலையம், கூடுதல் முதன்மைப்படுத்தும் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்.இ.ஆ.ப அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குநர் திரு.பாண்டித்துரை, வேளாண்மை நேர்முக உதவியாளர் திரு.ரவிபாரதி, வேளாண்மை துணை இயக்குநர் திரு.ராஜா, வேளாண்மை விற்பனைக்குழு செயலாளர் திரு.மு.சந்திரசேகர், திண்டுக்கல் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் திரு.செ.ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்