Close

Agri GDP Advance

Publish Date : 22/07/2019

செ.வெ.எண்:-64/2019 நாள்:- 22.07.2019
திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜுலை – 2019-ம் மாதத்திற்குரிய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.07.2019 அன்று வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாவட்ட வளர்ச்சி மன்றக்கூடத்தில் நடைபெறவுள்;ளது.

அன்றைய கூட்டத்தில் 27.06.2019 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏற்கனவே விவசாயிகளால் கொடுக்கப்பட்ட மனுக்களின் கோரிக்கைகள் மீது விவாதிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காண உள்ளார்கள்.

சென்ற கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களுக்குரிய பதில்கள் கூட்ட அரங்கில் வைக்கப்படும். அதனைப் பார்த்து விவசாயிகள் பதில்களை தெரிந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைக்கு தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள்; தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.