Agri GDP
செ.வெ.எண்:-51/2021
நாள்:-27.09.2021
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் Google Meet இணையதளம் வழியாக நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 30.09.2021 அன்று காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் Google Meet இணையதளம் வழியாக நடைபெறவுள்ளது.
அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் கருவிகள், ஒழுங்கு முறை விற்பனைக்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் விவசாய கடன் சம்மந்தப்பட்ட தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.
விவசாயிகள் அவர்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைக்கு தீர்வு கண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.