Agri Machinery Mela
செ.வெ.எண்:-29/2025
நாள்:-11.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் 17.06.2025 அன்று நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த முகாம் 17.06.2025 (செவ்வாய்கிழமை) அன்று காலை 10.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் கட்டட வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் திறன்மிகு இயக்கம், பராமரிப்பு, பழுதுகளைக் கண்டறிதல், உதிரி பாகங்கள் குறித்த தெளிவுரை, செய்யக் கூடியது மற்றும் செய்யக்கூடாதது பற்றி விவசாயிகள் அறிந்துக் கொள்ளலாம். மேலும், விவசாயிகள் தனியாரின் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்களுடனும், வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவிப்பொறியாளர்களுடனும் நேரில் கலந்துரையாடி விளக்கம் பெறலாம்.
எனவே, விவசாயப் பெருமக்கள் திரளாக இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.