Agri Marketing-TNMM collector inspection

செ.வெ.எண்:-77/2025
நாள்:-25.02.2025
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறுதானியம் பதப்படுத்தம் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமத்தில், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறுதானியம் பதப்படுத்தம் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமத்தில் திரு.அபுபக்கர் சித்திக் என்பவர் சிறுதானிய பதப்படுத்தம் மையம் அமைத்துள்ளார். தானியம் சுத்தம் செய்யும் இயந்திரம், கல் மற்றும் தூசி நீக்கும் இயந்திரம், தோல் நீக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம், தானியத்தை நிறம் பார்த்து பிரிக்கும் இயந்திரம், தானியம் மெருகூட்டும் இயந்திரம், எடையிடும் இயந்திரம், முத்திரையிடும் இயந்திரம் போன்ற முதன்மை பதப்படுத்தும் இயந்திரங்களை நிறுவியுள்ளார். இயந்திரங்களுக்கான மொத்த தொகை ரூ.18.40 இலட்சம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் 75 சதவீதம் மானியமாக ரூ.13.28 இலட்சம் வழங்கப்படும்.
இந்த மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான வேளாண் கொள்முதல் குழு உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிறுதானிய வணிகத்தை அதிகப்படுத்துவதன் மூலம் சிறுதானியங்களின் நுகர்வை அதிகரிக்கலாம். சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்யும் விவசாய பெருமக்களின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். இதன் மூலம் சிறுதானிய உற்பத்தியையும் அதிகரிக்கலாம். புதிய மற்றும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சிறுதானிய பதப்படுத்தும் மையங்களை விரிவுபடுத்துவதற்கான நிதி ஆதரவும் இத்திட்டத்தில் உள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் திரு.பாண்டியன், வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) திருமதி ரெ.உமா, வேளாண்மை துணை இயக்குநர்(மத்திய திட்டம்) திருமதி செ.அமலா, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி காயத்ரி, உதவி செயற்பொறியளர் திரு.குமணவேல், காந்திகிராமம் வேளாண் அறிவியல் நிலையம் பேராசிரியர் திரு.சரவணன், வேளாண்மை அலுவலர் திருமதி நர்மதா, மாவட்ட அளவிலான வேளாண் கொள்முதல் குழு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.