Close

Agri -Nutritional Farming machine

Publish Date : 03/07/2025

செ.வெ.எண்:-07/2025

நாள்:-03.07.2025

திண்டுக்கல் மாவட்டம்

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் – காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு மற்றும் பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், 2025-26-ஆம் நிதியாண்டில் மக்களின் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஜூலை 4-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் மக்களின் அன்றாட காய்கறித் தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டுத்தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாகவும் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற ஆறு வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 100 சதவீதம் மானியத்திலும், நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் வசிக்கும் மக்களின் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விரைவில் பலனளிக்கும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய மூன்று வகையான பழச்செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்பு 100 சதவீதமானியத்திலும் வழங்கப்படவுள்ளது. ஒரு பயனாளி அதிகபட்சமாக 2 தொகுப்பு வரை பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற Android மொபைல்களில் UZHAVAR செயலி மூலமாகவும் அல்லது https:tnhorticulture.tn.gov.in/kit என்ற வலைதளத்திலும் ஆதார் எண், குடும்ப அட்டை நகல் போன்ற ஆவணங்கள் கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம். மேலும், அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு இத்திட்டத்தில் பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.