Close

Agri -seeds pack

Publish Date : 03/07/2025

செ.வெ.எண்:-06/2025

நாள்:-03.07.2025

திண்டுக்கல் மாவட்டம்

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் – பயறு வகை விதைத் தொகுப்பு திட்டத்தில் பயறு வகை விதைகள் அடங்கிய தொகுப்பு 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 15.03.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வெளியிடப்பட்ட 2025-26-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் பயறு வகை விதைத் தொகுப்பு திட்டத்தில் புரதச்சத்து நிறைந்த மரத்துவரை, காராமணி உள்ளிட்ட பயறு வகைகளை இல்லந்தோறும் வளர்க்கும் பொருட்டு பயறு வகை விதைகள் அடங்கிய தொகுப்பு 100 சதவீதம் மானியத்தில் வேளாண் துறையின் மூலம் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், இல்லத்தில் தோட்டத்தில் விதைப்பு செய்ய ஏதுவாக இடம் உள்ளவர்கள், உழவர் செயலியில் பதிவேற்றம் செய்தவர்கள், பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள் பயனடையலாம்.

இத்திட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 04.07.2025 அன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்திலும் 2000 பயனாளிக்கு வழங்க இலக்கீடு வரப்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் பயனடைய தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் ஆதார் நகல் கொடுத்து முழு மானியம் பெற்று பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.