Close

AGRI_WATERSHED YATRA

Publish Date : 24/02/2025
.

செ.வெ.எண்:-68/2025

நாள்:-23.02.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத்திட்டப்பணிகள் மற்றும் நீர் சேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நீர்வடிப்பகுதி யாத்திரை பிரச்சார நிகழ்ச்சி சிங்காரக்கோட்டையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத் திட்டம் – (PMKSY-WDC-2.0) சாணார்பட்டி, வடமதுரை, வேடசந்தூர், தொப்பம்பட்டி மற்றும் குஜிலியம்பாறை வட்டாரங்களில் உள்ள 37 கிராம ஊராட்சிகளில் 33 நீர்வடிப்பகுதிகளில் நீர்வடிப்பகுதி குழுக்கள் மூலம் 2021-2022ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டப்பணிகள் மற்றும் நீர் சேமிப்பின் அவசியம் குறித்து நீர்வடிப்பகுதி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 5 வட்டாரங்களில் உள்ள 7 நீர்வடிப்பகுதி கிராமங்களில் 19.02.2025 முதல் 26.02.2025 வரை மத்திய நிலவளத்துறையின் மூலம் நீர்வடிப்பகுதி யாத்திரை பிரச்சார நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இப்பிரச்சார நிகழ்ச்சியில், வடமதுரை வட்டாரம் சிங்காரக்கோட்டை நீர்வடிப்பகுதி கிராமத்தில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு குழு அலுவலகத்தில் கிராம மக்கள் முன்னிலையில் நீர்வடிப்பகுதி யாத்திரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மத்திய நில வளத்துறை நிபுணர் திரு.எம்.பிரகாஸ் குமார் பங்கேற்று திட்டப்பணிகள் குறித்தும், நீர் சேமிப்பின் அவசியம் குறித்தும் நீர்வடிப்பகுதி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் நடைபயணமாக சென்று சிங்காரக்கோட்டை கிராமத்தில் புதுக்குளம் கால்வாய் சீரமைத்தல் பணியினை தொடங்கி வைத்தார். விவசாயி திருமதி இந்திராணி சீரங்கன் என்பவது நிலத்தில் இம்முகமையின் மூலம் மானியத்தில் மாங்கன்றுகள் நடவு செய்யும் பணியினை தன்னார்வலர்களுடன் இணைந்து பழமரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். சிங்காரக்கோட்டை நீர்வடிப்பகுதியில் இந்த நிதியாண்டில் நீர் சேமிப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட தடுப்பணை பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சிங்காரக்கோட்டை நீர்வடிப்பகுதியில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட உறுதுணையாக இருந்த 6 நபர்களுக்கு நீர்வடிப்பகுதி முன்னோடி நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள், சிங்காரக்கோட்டை கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நீர்வடிப்பகுதி திட்டம் குறித்தும், நீர் சேமிப்பின் அவசியம் குறித்தும் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி மணமல்லி, திண்டுக்கல் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் திட்ட அலுவலர்/வேளாண்மை இணை இயக்குநர் திரு.அ.பாண்டியன், உதவிப் பொறியாளர் (வே.பொ.) திரு. மா.சகாயராஜ், நீர்வடிப்பகுதி வளர்ச்சி அணி உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.