Close

Agricultural GDP

Publish Date : 28/04/2022
.

செ.வெ.எண்:-78/2022

நாள்:27.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்,மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(27.04.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அவற்றை விவசாயிகள் அறிந்து நல்லமுறையில் பயன்படுத்தி வேளாண் தொழிலை மேம்படுத்தி, விவசாய பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்தி, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.பயிர் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு உள்ளிட்டநடவடிக்கைகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், கடன் பெறும் விவசாயிகளின் குறிப்பட்ட காலக்கெடுவில் கடன் செலுத்தும் விவசாயிகளுக்கு 7 சதவீதம் வட்டியில், மத்திய அரசு பங்களிப்பு 3 சதவீதத்தோடு கூடுதலாக தமிழக அரசு 4 சதவீதம் வட்டித் தள்ளுபடியுடன் விவசாயிகளுக்கு பூஜ்ஜிய சதவீத, வட்டியில்லா கடன் வழங்க இருப்பதால் உரிய காலக்கெடுவிற்குள் கிசான் கடன் அட்டையில் கடன் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.காந்திநாதன், இணை இயக்குநர் (வேளாண்மை) திரு.எஸ்.பாண்டித்துரை, துணை இயக்குநர் (வேளாண்மை மாநில திட்டம்) திரு.பி.சுருளியப்பன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) திரு.ஜெ.பெருமாள்சாமி, செயற்பொறியாளர்(பொதுப்பணித்துறை) திரு.கோபி, வேளாண்மை துணை இயக்குநர்(விதை ஆய்வு) திரு.மாயக்கிருஷ்ணன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார். நேர்முக உதவியாளர்(வேளாண்மை) விவசாயம் திரு ரவி பாரதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.