Close

Agriculture Department – Grievance Day Petition

Publish Date : 01/08/2022
.

செ.வெ.எண்:-89/2022

நாள்:29.07.2022

திண்டுக்கல் மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(29.07.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்களின் பொதுவான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அவற்றை விவசாயிகள் அறிந்து நல்லமுறையில் பயன்படுத்தி வேளாண் தொழிலை மேம்படுத்தி, விவசாய பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்து, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கான கடனுதவிகளை விரைந்து நடவடிக்கை எடுத்து வழங்க வேண்டும். வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு ஆடிப்பட்டத்திற்குத் தேவையான விதைகளை உடனடியாக ஏற்பாடு செய்து வழங்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் அனுமதி பெற்று, குளங்களில் இலவசமாக வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் இந்த ஆண்டு 50 லட்சம் மனிதசக்தி நாட்கள் என திட்டமிடப்பட்டு, விவசாய வரப்பு கட்டுதல், வாய்க்கால் கட்டுதல், அரசு திட்டங்களில் வீடு கட்டும் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தொப்பம்பட்டி பகுதியில் தனியார் நிறுவனம் சூரியகாந்தி விதையின் காரணமாக விலைச்சல் பாதிப்பு தொடர்பாக குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆடு, மாடு, கோழி விற்பனை சந்தைகளில் அரசு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும்.

தண்ணீரை மாசுப்படுத்தும் எந்தவெரு நிறுவனமும் கழிவு நீரை குளத்திலோ அல்லது நில பகுதியில் விட எவ்வித அனுமதியும் இல்லை. சுத்திகரிக்கப்படாத நிலையில் கழிவு நீரை வெளியேற்றினால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய உற்பத்தி பொருட்களை மதிப்புக்கூட்டுப்பொருளாக மாற்றிட விவசாயிகளுக்கு தேவையான வங்கிக் கடனுதவிகள் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.பெ.ரவிபாரதி, இணை இயக்குநர்(வேளாண்மை)(பொ) திருமதி.விஜயராணி, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் திரு.காந்திநாதன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) திரு.ஜெ.பெருமாள்சாமி, செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு) திரு.கோபி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்;, திண்டுக்கல்.