Close

Agriculture Department

Publish Date : 18/07/2019

செ.வெ.எண்:55/2019 நாள்:18.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கைச்செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலமாக நுண்நீர் பாசணத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

2019-20ம் ஆண்டில் இத்திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயனடைந்திடும் பொருட்டு, விவசாயிகளுக்கு தேவையான சிறு மற்றும் குறு விவசாய சான்றிதழ்கள் உடனடியாக வழங்கிட சிறப்பு முகாம்கள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகியவை இணைந்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 20.07.2019-ம் தேதி சனிக்கிழமையன்று காலை 10 மணி முதல் நடைபெறவிருக்கின்றது.

இச்சிறப்பு முகாம்களில் நுண்நீர் பாசனத்திற்கு தேவையான சிறு, குறு விவசாய சான்றிதழ்களை உடனுக்குடன் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் நுண்நீர்பாசன கருவிகள் அமைத்திடும் நிறுவன பிரதிநிதிகளும் இம்முகாமில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இம்முகாமில் திண்டுக்கல் மாவட்ட அனைத்து விவசாயிகளும் கலந்துகொண்டு நுண்நீர் பாசனத்திட்டத்தில் சேருவதற்கு ஏதுவாக சிறு மற்றும் குறு விவசாய சான்றினை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்;.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.