Close

Agriculture GDP

Publish Date : 25/07/2019
1

2

செ.வெ.எண்:-70/2019 நாள்:-25.07.2019
திண்டுக்கல் மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் இன்று (25.07.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

2019ம் வருட ஜூலை மாதம் வரையிலான சராசரியாக பெய்ய வேண்டிய மழையளவான 30.60 மி.மீ க்கு 07.81 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த வருட சராசரி 262.70 மி.மீ க்கு இதுவரை 105.08 பெய்துள்ளது இது ஆண்டு சராசரி மழையளவை காட்டிலும் 157.62 மி.மீ அதாவது 60 சதவீதம் குறைவாகும்.

ஜூன் மாதம் முடிய சாகுபடி செய்யப்பட்ட பரப்பு ஒத்திசைவு செய்ததின் அடிப்படையில் நெல் 174 எக்டர், பயறுவகைகள் 4 எக்டர், மற்றும் சிறுதானியங்கள் 68 எக்டர், ஒட்டுமொத்தமாக வேளாண்பயிர்கள் 253 எக்டர் ஒத்திசைவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான கடன் அட்டை (KCC) தற்சமயம், அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அரசு முயற்சி எடுத்துள்ளது. இந்த கடன் அட்டை பெறும் விவசாயிகள் 1.6 லட்சம் வரை அனைத்து வங்கிகளிலும் பிணை இல்லாத கடன் பெறலாம், மேலும் சரியாக கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி 4 சதவீதம் மட்டுமே.

பயிர் காப்பீடு திட்டம் நமது மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

தற்போது நமது அரசு தென்னை விவசாயிகள் பயன் பெறும் பொருட்டு கொப்பரை கொள்முதல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி நத்தம், பழனி, மற்றும் வத்தலகுண்டு ஆகிய ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை கொள்முதல் செய்யப்படும். கொப்பபரை கொள்முதல் விலை கிலோவிற்கு 95.21 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 191 கிலோ வரை ஒரு விவசாயிக்கு கொள்முதல் செய்யப்படும்.

பிரதம மந்திரி கிசான் (PM – KISAN) சம்மன் திட்டத்தின் மூலம் சிறுகுறு விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக இந்திய அரசால் வருடத்திற்கு ரூ. 6,000 வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சிறுகுறு விவசாயிகள் இதன் மூலம் பயன் பெற்று வருகின்றனர். தற்சமயம் மாண்புமிகு பாரத பிரதமரால் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்தில் சேராத விவசாயிகள் இருந்தால் அவர்கள் அந்தந்த கிரம நிர்வாக அலுவலரிடம் சென்று தங்களது விபரங்களை கொடுத்து பயன் பெறலாம்.

விவசாயிகளின் நலன் கருதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இ-அட்ங்கல் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது கைபேசியில (cell Phone) உள்ள (Play Store) ப்ளே ஸ்டோர் மூலம் இ-அட்ஙகல் மொபைல் ஆப்-ஐ தரவிறக்கம் செயதல் அவசியம். இதன் மூலம் விவசாயிகள் தங்களது பதிவு பெற்ற மொபைல் எண்ணை உள்ளீடு செய்வதன் மூலம் தங்களுக்கு சொந்தமான நிலங்களின்; விபரங்களை தெரிந்து கொள்ளலாம். நிலத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள விபரங்களை பதிவு செய்யலாம் மற்றும் சரி பார்க்கலாம்.

அடங்கல் விபரத்தை தேவையான நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் மொபைல் மூலமாக பார்;க்கவும் தரவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும்.தேவையான விவரங்களை மொபைல் மூலம் உடனுக்குடன் பெறுவதால் கால விரயம் மற்றும் தேவையற்ற அலைச்சல் தவிர்க்கப்படுகிறது.மேலும் விவசாயிகள் தங்களது நிலத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள விபரங்கள் அட்ஙகலில் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை நேரடியாக கண்ககாணிக்கவும் குறையிருப்பின் உடனுக்குடன் சுட்டிக் காட்டவும் இந்த மொபைல் ஆப் வெகுவாக பயன்படும்.

வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைதுறையின் மூலமாக சிறுகுறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் பொருட்டு, கூட்டுப்பண்ணையம் அல்லது தொகுப்புபண்ணையம் அமைத்திட அனுமதிக்கப்பட்டு; விவசாய ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, வேளாண்மைத்துறையின் சார்பாக 52 எண்கள் மற்றும் தோட்டக்கலை துறையின் சார்பாக 29 எண்கள் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலை துறையின் மூலமாக சிறுஃகுறு மற்றும் இதர விவசாயிகளுக்கு மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது. இதற்கென சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 75மூ மானியம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள சிறுகுறு விவசாயிகள் தங்களுக்கான சிறு குறு சான்றிதழ் எளிதில் பெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்யப்பட்டுள்ளது. தேவையுள்ள விவசாயிகள் தங்களது வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைகட்டுகளில் நீர் நிலவரம், வரதமாநதி அணையின் மொத்த கொள்ளளவு – 66.47 அடி, தற்சமயம் நீர் இருப்பு – 41.83 அடி, பாலாறு, பொருந்தலாறு அணையின் மொத்த அளவு – 65 அடி, தற்சமயம் நீர் இருப்பு – 26.61 அடி, பரப்பலாறு அணையின் மொத்த கொள்ளளவு – 90 அடி, தற்சமயம் நீர் இருப்பு – 55.57 அடி, நங்காஞ்சியார் அணையின் மொத்த கொள்ளளவு – 39.37 அடி, தற்சமயம் நீர் இருப்பு – 04.85 அடி, குதிரையாறு அணையின் மொத்த கொள்ளளவு – 80 அடி, தற்சமயம் நீர் இருப்பு – 25.12 அடி, குடகனாறு அணையின் மொத்த கொள்ளளவு – 27.00 அடி, தற்சமயம் நீர் இருப்பு – 0.00 அடி, மருதாநதி அணையின் மொத்த கொள்ளளவு – 74.00 அடி, தற்சமயம் நீர் இருப்பு – 26.00 அடி, மஞ்சளாறு அணையின் மொத்த கொள்ளளவு – 57.00 அடி, தற்சமயம் நீர் இருப்பு – 35.40 அடி நீர் மட்டம் உள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.மதுபாலன்.இ.ஆ.ப, இணை இயக்குநர் (வேளாண்மை) திரு.தமிழ்செல்வன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) திரு.சீனிவாசன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்