Close

Airman Selection

Publish Date : 27/11/2020

செ.வெ.எண்:- 26/2020

நாள்:- 26.11.2020

திண்டுக்கல் மாவட்டம்

இந்திய விமானப் படையில் ஆட்சேர்ப்பு பணிக்கான
விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இந்திய விமானப் படையில் ஆட்சேர்ப்பு பணிக்கான விழிப்புணர்வு முகாம், புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டரங்கில் 10.12.2020 முதல் 19.12.2020 வரை நடைபெற உள்ளது. இப்பேரணியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் www.airmenselection.odac.in என்ற இணையதளத்தில் நவம்பர் மாதத்தில் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்யவேண்டும். இதற்கான கல்வித் தகுதி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் /டிப்ளமோ முடித்தவர்கள் / கல்லூரிகளில் முதலாம், இரண்டாம் ஆண்டு பயிலுபவர்கள் (ஆண்கள் மட்டும்) இப்பேரணியில் கலந்து கொள்ளலாம்.

மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திண்டுக்கல் என்ற முகவரியிலும், 0451-2491498 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.