Close

All types of persons with disabilities are required to submit a Certificate of Life to receive a monthly maintenance allowance – District Collector Mr. S. Visakhan, IAS, informed them.

Publish Date : 19/07/2021

செ.வெ.எண்:31/2021

நாள்:19.07.2021

திண்டுக்கல் மாவட்டம்

அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற ஆயுள் சான்று சமர்பிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக மூலமாக மனவளர்ச்சி குன்றியோர்கள், கை கால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர், பார்க்கின்சன் நோய், தண்டுவடம் மரபு நோய் மற்றும் நாட்பட்ட நரம்பியல் நோய் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கண்ட திட்டங்களுக்கு மாதந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1500/- வீதம் பயன்பெறுபவர்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அரசிதழ் (Gazetted officer) பதிவுப் பெற்ற அலுவலரிடம் (LIFE CERTIFICATE) ஆயுள் சான்று பெற்று, தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், வங்கி பாஸ்புக் நகல், பாஸ்போர்ட் அளவிலான போட்டோ-1 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 30.07.2021 அன்றுக்குள் பாதுகாவலர் மட்டும் ஒப்படைத்து பயன்பெற தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0451-2460099 என்ற மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.