Close

Amma Two Wheeler (2018-19)

Publish Date : 20/06/2019

செ.வெ.எண்:-38/2019 நாள்:20.06.2019
திண்டுக்கல் மாவட்டம்

பணிபுரியும் மகளிருக்கான அம்மா இருசக்கர வாகன திட்டம் 2018-19கீழ் மானியம் பெறுவதற்கு, தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்;கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தகவல்

பணிக்குச் செல்லும் மகளிர் மற்றும்; சிறு வணிகம் செய்யும் மகளிர் நலன் கருதி அவர்களின் வசதிக்காக தமிழக அரசு ‘அம்மா இரு சக்கர வாகன திட்டத்தினை” 2017-18 -ம் ஆண்டு முதல் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் செயல்படுத்தி வருகிறது. தற்போது அரசாணை (நிலை) எண்:179, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (மஅதி.3) துறை நாள்:20.12.2018ன் படி 2018-19 ஆம் ஆண்டிற்கு இரண்டாம் கட்டமாக அம்மா இரு சக்கர வாகனத்திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்;கப்படுகின்றன.

18 வயது முதல் 40 வயது வரை உள்ள பணிபுரியும் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய தகுதியுடையவர்கள். மேலும் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பயனாளி 8ம் வகுப்பு பயின்று இருத்தல் வேணடும.; ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம். அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே மானியம் பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்ய தகுதியற்றவர் ஆவார்.
125 ஊஊ திறனுக்கு மிகாத ஆட்டோ கியர் அல்லது கியர் இல்லாத இருசக்கர வாகனங்களை பயனாளிகள் சொந்த நிதியிலிருந்தோ அல்லது வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம். இருசக்கர வாகனம் மோட்டார் வாகன பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய தகுதிவாய்ந்ததாக இருத்தல் வேண்டும். இருசக்கர வாகனத்தின் விலையில் 50மூ அல்லது ரூ.25,000/- இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலமாக பெறப்படும் வாகனத்தை 3 ஆண்டுகளுக்கு வேறு நபருக்கு விற்கவோ பெயர் மாற்றம் செய்யவோ கூடாது.

அரசாணை எண்:143 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (CGS-3) துறை, நாள்:27.09.2018-ன் படி பணிபுரியும் மகளிர் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 25மூ கூடுதல் தொகை ரூ.6250/-ஐ சேர்த்து மொத்த மானியத்தொகை ரூ.31,250/- வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கென உள்ள பிரத்யேகமான விண்ணப்ப படிவத்தில் மட்டுமே பயனாளிகள் விண்ணப்பித்தல் வேண்டும். விண்ணப்ப படிவங்களை மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகங்கள்;, பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில்; எவ்வித கட்டணமும் இன்றி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயனாளிகள் வசிக்கும் தொடர்புடைய மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 20.06.2019 முதல்; 04.07.2019 வரை மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். 04.07.2019-க்கு பின் வரும் விண்ணப்;பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பங்களுடன் கீழ்கண்ட சான்றுகள் இணைக்கப்பட வேண்டும்.
1. வயது சான்று (18 முதல் 40 வயது வரை)
2. இருப்பிட சான்று
3. ஓட்டுநர் உரிமம் / பழகுநர் உரிமம்
4. பணிபுரிவதற்கான சான்று (நிறுவன தலைமை வழங்குவது /சுய தொழில் சான்று)
5. வருமான சான்று (பணிபுரியும் நிறுவனம் வழங்கும் சான்று /சுய சான்று)
6. கல்விச் சான்று (குறைந்தபட்சம் 8 வது வகுப்பு பரிட்சை எழுதியதற்கான சான்று /பள்ளி மாற்றுச் சான்று)
7. பாஸ்போர்ட் புகைப்படம்
8. முன்னுரிமை பெறும் இனங்களில் அது குறித்த சான்று
9. மாற்றுத் திறனாளி அடையாள அட்டை
10. சாதிச் சான்று (SC/ST பயனாளிகளுக்கு)

விண்ணப்பங்கள் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். தகுதிவாய்ந்த மகளிர் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.