Close

Animal Husbandry – Poultry Distemper Vaccine

Publish Date : 07/03/2023

செ.வெ.எண்:-43/2023

நாள்:-21.02.2023

திண்டுக்கல் மாவட்டம்

கோழி வளர்க்கும் பயனாளிகள் அனைவரும் தங்களது கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய்தடுப்பூசி இலவசமாக போட்டு கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் பிப்ரவரி மாதம் கோழிக்கழிச்சல் நோய்த்தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் 21.02.2023 முதல் 28.02.2023 வரை இந்த முகாமானது அந்தந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட கால்நடை நிலையங்களில் நடைபெற உள்ளது.

இது சமயம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோழி வளர்க்கும் பயனாளிகள் அனைவரும் அவர்களது கிராமத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கால்நடை நிலையங்களில் தங்கள் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய்தடுப்பூசி இலவசமாக போட்டு, தங்களது கோழிகளுக்கு கோழிகழிச்சல் நோய் வராமல் பாதுகாத்து பயனடையுமாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்., இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.