Close

Animal Husbandry – Special Health Camp

Publish Date : 08/12/2021

செ.வெ.எண்:-18/2021

நாள்:08.12.2021

திண்டுக்கல் மாவட்டத்தில் 280 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 280 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இம்முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய்த்தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் கால்நடை பராமரிப்புத் துறையால், டிசம்பர் 2021-ஆம் மாதம் முதல் மார்ச் 2022-ஆம் மாதத்திற்குள் நடத்தப்படவிருக்கும் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் மூலம் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்குத் தேவையான நோய்த்தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளைப் பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.