Animal Husbandry
செ.வெ.எண்:-26/2022
நாள்:-10.06.2022
திண்டுக்கல் மாவட்டம்
‘கால்நடை பராமரிப்புத்துறையில் ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் பணி வாய்ப்பு’ என்று வாட்ஸ்அப் வாயிலாக பரவும் தகவல் தவறானது. அதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
‘தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் (யுniஅயட ர்யனெடநச உரஅ னசiஎநச) ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு, சம்பளம், முறையே ரூ.15 ஆயிரம் மற்றும் 18 ஆயிரம் எனவும் தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமன ஆணை வழங்கப்படும். இதற்கான ஆணை ஜுன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் எனவும், விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்திடுமாறு’ புலனம் (றூயவள யுpp) செயலி மூலம் பகிரப்பட்டு வருகிறது.
இது தவறானது. இதன் மூலம் பகிரப்படும் செய்திகள் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறைக்கு தொடர்பற்றவை. மேலும் இது தவறான தகவல்கள். எனவே இத்தகவலை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.