Close

Anna Award

Publish Date : 02/12/2021

செ.வெ.எண்:-05/2021

நாள்:02.12.2021

வீரதீர செயல்கள் துணிவுடன் புரிந்தமைக்கான “அண்ணா பதக்கம்” விருதுகள் பெற தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழக அரசு சார்பில் 2022-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று, வீரதீர செயல்கள் துணிவுடன் புரிந்தமைக்கான “அண்ணா பதக்கம்” விருது தமிழகத்தினை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இந்த பதக்கம் பெறுவதற்கு வயது வரம்பு ஏதுமில்லை.

திண்டுக்கல் மாவட்டத்தில் வீரதீர செயல்கள் துணிவுடன் புரிந்தமைக்கான அண்ணா பதக்கம் விருதுகள் பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இவ்விருதிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை இணைய தள முகவரியான http://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து, தொடர்புடைய ஆவணங்களுடன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விரிவான அறிக்கையை 3 பிரதிகளுடன் “மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல்- 624004” என்ற முகவரியில் 08-12-2021-ஆம் தேதி மாலை 4.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 0451-2461162 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.