Close

Applications are invited for availing loan (DIC NEEDS)

Publish Date : 22/08/2019

செ.வெ.எண்:-54/2019 நாள்:–.22.08.2019

திண்டுக்கல் மாவட்டம்

தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மானியத்துடன் கூடிய தொழிற்கடன் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோர் மூலம் ஏற்படவும் தமிழக அரசால் “புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்” (NEEDS) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டம், பட்டயம், ஐடிஐ/ தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாக தொழில் துவங்கிட இத்திட்டத்தின் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு 21 வயது முதல் 35 வயது வரை மற்றும் பெண்கள் / பட்டியலிடப்பட்டோர் / பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / முன்னாள் இராணுவத்தினர் / மாற்றுத் திறனாளிகள் /சீர்மரபினர் / திருநங்கைகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு 21 வயது முதல் 45 வயது வரை ஆகும். பயனாளிகள் 3 வருடத்திற்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

மேலும் அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த பொருளாதார ரீதியாக சாத்தியப்படக்கூடிய தொழில் தொடங்க 25 சதவீதம் அரசு மானியத்துடன் (அதிகபட்சம் ரூ.30 இலட்சம்) கூடிய 10 இலட்சம் முதல் 5 கோடி வரை வங்கிக் கடனுதவி வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 15 நாட்கள் கட்டாய தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்படும். வியாபாரம் மற்றும் நேரடி விவசாயத்திற்கு இத்திட்டத்;தில் பயன்பெற இயலாது.

இவைகள் தவிர பொது பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் சொந்த முதலீடாக செலுத்த வேண்டும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடைய அல்லது இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை,
திண்டுக்கல் அவர்களை நேரிலோ அல்லது 0451-2470893, 2471609 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

தற்போது கீழ்காணும் சேவைத் தொழில்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அவைகள், நிலத்தை சமப்படுத்தும் ஃ சீர்படுத்தும் வாகனம், குளிர் சங்கிலி மறுசுழற்சி வாகனம், எல்பிஜி புல்லட் டேங்கர் டிரக், ப்ளை ஆஸ் கேரியர் டேங்கர் டிரக், கொள்கலனுடன் கூடிய டிரக், ரோடு ரோலர், பிட்டுமென் மிக்ஸிங் மற்றும் லேயிங் எக்யூப்மென்ட் வாகனம், ஹயரிங் டேங்கர் டிரக், கிரேன், கான்கிரிட் மெசின், போர்வெல் வாகனம், ரெடி மிக்ஸ் கான்கிரிட் கேரியர், ரெக்கவரி வாகனம், கான்கிரிட் பில்லிங் வாகனம், எல்பிஜிஃவாயு நிரப்பும் வாகனம், நடமாடும் உணவக வாகனம்.

இத்திட்டத்தில் தகுதியுள்ள தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து தொழிற்கடன் உதவி பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்