Art and Culture Department

Publish Date : 07/06/2019

செ.வெ.எண்:-10/2019 நாள்:07.06.2019

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கைச் செய்தி

தமிழ் நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தவும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஙர்களின கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் மாவட்ட ஆட்சித தலைவர் அவர்கள் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 2002 -2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வயது மற்றும் கலைப்புலமையின அடிப்படையலான அடிப்படையில் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. அவ்வாணையின்படி 2002-2003 ஆம் ஆண்டு முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் 2017 -2018 ஆம் ஆண்டு வரையில் 80 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.

2018-2019 ஆம் ஆண்டுக்கான கலை விருதுகள் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் திண்டுக்கல் மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக திண்டுக்கல் மாவட்டத்தில் இயல் இசை நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் தலா ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்படவுள்ளது.
ஆகவே திண்டுக்கல மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம் கணியான் கூத்து ஓவியம் சிற்பம்அரசன் அரசியாட்டம், புலியாட்டம் இகாளையாட்டம் மானாட்டம் பாம்பாட்டம் குறவன் குறத்தியாட்டம் ஆழியாட்டம்; கைச்சிலம்பாட்டம் சிலம்பாட்டம் (வீரக் கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள், என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கலை விருகள் முறையே

வ.எண்            வயது                                                                                                      விருது

  1.                  18 வயதும் அதற்குட்பட்டகலைஞர்களுக்கு                        கலை இளமணி

2.                  19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு                 கலை வளர்மணி

3.                  36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு                 கலைச் சுடர்மணி

4.                  51 முதல் 60 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு                 கலை நன்மணி

5.                  61 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு                            கலை முதுமணி

என்ற நிலைகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி பட்டயம் மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும். மேலும் திண்டுக்கல மாவட்டத்தில் தேசிய விருதுகள் மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இவவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக் கூடாது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயதுச் சான்று முகவரிச்சான்று மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் (தொலைபேசி எண்ணுடன்) கீழ்க்கண்ட முகவரிக்கு 15-06-2019-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் மேலும், விபரங்களுக்கு உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு, ரேஸ் கோர்ஸ் காலனி, தல்லாக்குளம் (அ), மதுரை -625002,தொலைபேசி எண்: 0452-2566420 தொடர்பு கொண்டு பயன்பெறாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.