Close

Awareness of the clean people movement in urban areas Meeting

Publish Date : 24/06/2022
.

செ.வெ.எண்:-66/2022

நாள்:-23.06.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட நகர்புறப்பகுதிகளில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(23.06.2022) திண்டுக்கல் மாவட்ட நகர்புறப்பகுதிகளில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர்புறங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், எனது குப்பை எனது பொருப்பு என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடுகளிலிருந்து குப்பைகளை தரம் பிரித்து பெருதல் குறித்தும், குப்பைகளை எரிக்காமல் இருப்பது குறித்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்து, மீண்டும் மஞ்சப்பை முழு அளவில் கொண்டு வருதல் குறித்தும், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நகர்புறப் பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து பெருவது குறித்த விழி;ப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இதை நகர தூய்மைக்கான மக்கள் இயக்கமாக செய்திட வேண்டும். சமூதாய நலனுடன் அடுத்தவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குப்பை என்பது ஒவ்வொருவரின் பொருப்பு என்பதை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொண்டு நிறுவனங்கள், கவுன்சிலர்கள், தங்களது பகுதி வார்டுகளை 100 சதவீகித தூய்மை வாடாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த இக்கூட்டம் முதல் அடியாக இருக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள், சுகாதார அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் தங்களது பகுதிகளில் பிளாஸ்டிக்பை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து, கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். வரும் சனிக்கிழமை (25.06.2022) நடைபெறும் நகர்வு விழிப்புணர்வு (Movement Awareness) சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் தொலைபேசி மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும்; குறைகளை பதிவு செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டம் போல, திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கக்கூடிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுவான பிரச்சனைகள் உடனுக்குடன் மேல் நடவடிக்கை எடுத்து தீர்வு காண வழிவகை செய்யப்படும் என பேசினார்.

தொடர்ந்து, ரோட்டரி கிளம் திண்டுக்கல் மேற்கு சங்கத்தின் சார்பில் சிறந்த வேவைக்கான தூய்மை பணியாளர் விருது கேடையம் திரு.பி.கந்தசாமி அவர்களுக்கும், சிறந்த சேவைக்கான இறுதி சடங்கு நடத்துனர் விருது திரு.அப்பாத்துரை அவர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், நகராட்சி ஆணையாளர்கள் திரு.டி.நாராயணன் (கொடைக்கானல்), திருமதி.தேவிகா (ஒட்டன்சத்திரம்), திருமதி.கமலம்(பழனி), மாநகரட்சி நகர்நல அலுவலர் மரு.இந்திரா, ரோட்டரி சங்க தலைவர் திரு.சண்முகம், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், ரோட்டரி சங்க பிரதிநிதிகள், பேரூராடசி செயல் அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.