Close

AZADI KA AMRIT MAHOTSAV

Publish Date : 07/12/2021
.

.

செ.வெ.எண்:-15/2021

நாள்:07.12.2021

சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழா- தூய்மை இந்தியா இயக்கம் 2.0 விழிப்புணர்வு ஊர்வலம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழா (AZADI KA AMRIT MAHOTSAV) சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இன்று(07.12.2021) கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். விழிப்புணர்வு ஊர்வலம் தலைமைத் தபால் நிலையம் வழியாக முக்கிய சாலைகள் வழியாக சென்று திண்டுக்கல் நேருஜி நினைவு நகரவை பள்ளியில் முடிவடைந்தது.

இதனைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், மாநகர் நல அலுவலர் மரு.இந்திரா உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.