Dr. Ambedkar award-DGl
செ.வெ.எண்:-16/2020
நாள்:20.11.2020
திண்டுக்கல் மாவட்டம்
2020-2021ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது பெறுவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப, அவர்கள் தகவல்
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது.இவ்விருதினை பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
2020-2021 ஆம் ஆண்டிற்கான டாக்டர்.அம்பேத்கர் விருது வழங்குவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயர்த்த முயற்சி செய்திருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் செய்த பணிகள், சாதனைகள் குறிப்பிட வேண்டும். விருது பெற தகுதியுடையோர், திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விண்ணப்பத்தை https://www.tn.gov.in/ta/forms/deptname/1 என்ற இணைய தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளளலாம்.
டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் உரிய படிவங்களில் பூர்த்தி செய்து 25.11.2020-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திண்டுக்கல் என்ற முகவரியில் நேரடியாவோ, தபால் மூலமாகவோ, சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.