Breakfast Scheme – Program

செ.வெ.எண்:-48/2023
நாள்:-28.04.2023
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(28.04.2023) நடைபெற்றது.
a
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியாதாவதது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஜூன் மாதம் அரசு ஆரம்பப் பள்ளிகள், அரசு நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணிகள் துவங்க உள்ளது. இத்திட்டத்திற்கு ஒவ்வொரு ஊராட்சி பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களை சமையல் செய்வதற்கு தேர்வு செய்ய வேண்டும். தேர்வின்போது அரசு நிர்ணயித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்ற வேண்டும். சரியான தகுதியான மகளிர் சுய உதவி குழுக்களை மட்டுமே தேர்வு செய்திட வேண்டும். அதிகாலையில் சமையல் செய்ய வேண்டியுள்ளதால் சமையல் கூடங்களில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் அங்கு நல்ல காற்றோட்டமுள்ள இடமாகவும் இருக்க வேண்டும். தீயணைப்பு கருவிகளை பொறுத்தியிருக்க வேண்டும். முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். அனைவரும் ஒருங்கிணைந்து இத்திட்டத்தை நமது மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேசினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் திருமதி திலகவதி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் திரு.நா.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) திரு.சுரேஷ், மாவட்ட சமூக நலன் அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, உதவி இயக்குநர்(பஞ்சாயத்து) ரெங்கராஜன், மகளிர் திட்டம் உதவி இயக்குநர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.