Close

C.M. Trophy – Sports

Publish Date : 09/09/2024

செ.வெ.எண்:-15/2024

நாள்:-08.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 10.09.2024 முதல் 24.09.2024 வரை நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 10.09.2024 முதல் 24.09.2024 வரை காலை 8.00 மணிக்கு நடைபெற உள்ளது. இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

போட்டிகளில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் நகல், பிறந்த தேதி சான்று, பள்ளி மற்றும் கல்லூரியில் பயில்வதற்கான சான்று (Bonafide or ID card), மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், அரசு ஊழியர்கள் (பணிபுரியும் அடையாள அட்டை), மாற்றுத்திறனாளிகள் (மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை), பொதுப் பிரிவு (இருப்பிட சான்று) ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டு வருதல் வேண்டும். மேலும் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கண்டிப்பாக விளையாட்டுச் சீருடை மற்றும் காலணியுடன் பங்கேற்க வேண்டும்.

10.09.2024 அன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளம் மற்றும் கேரம் விளையாட்டு, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான நீச்சல், பள்ளி மாணவிகளுக்கான ஹாக்கி, 10.09.2024 மற்றும் 11.09.2024 ஆகிய தேதிகளில் பள்ளி மாணவர்களுக்கான கபாடி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்து மற்றும் கிரிக்கெட், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான மேஜைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறும்.

11.09.2024 அன்று கல்லுாரி மற்றும் பொதுப்பிரிவில் மாணவ, மாணவிகளுக்கான தடகளம், பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி மற்றும் கைப்பந்து, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான கேரம் ஆகிய போட்டிகள் நடைபெறும்.

12.09.2024 அன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சதுரங்கம், கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான ஹாக்கி, பள்ளி மாணவிகளுக்கான கபாடி மற்றும் கால்பந்து, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவிகளுக்கான கைப்பந்து, 12.09.2024 மற்றும் 13.09.2024 ஆகிய தேதிகளில் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்து, பள்ளி மாணவர்களுக்கான கையுந்துப்பந்து, 13.09.2024 அன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இறகுப்பந்து, 13.09.2024 மற்றும் 14.09.2024 ஆகிய தேதிகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோ-கோ, பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து, கல்லுாரி மாணவர்களுக்கான கைப்பந்து, 14.09.2024 அன்று கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான சதுரங்கம் மற்றும் இறகுப்பந்து, பள்ளி மாணவிகளுக்கான கையுந்துப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறும்.

14.09.2024 முதல் 17.09.2024 வரை கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெறும். 16.09.2024 அன்று பள்ளி, கல்லுாரி மற்றும் பொதுப்பிரிவு மாணவ, மாணவிகளுக்கான சிலம்பம் ஆகிய போட்டிகள் நடைபெறும்

கல்லுாரி மாணவர்களுக்கு 16.09.2024 அன்று கபாடி, 16.09.2024 மற்றும் 17.09.2024 ஆகிய தேதிகளில் கையுந்துபந்து, 17.09.2024 மற்றும் 18.09.2024 ஆகிய தேதிகளில் கால்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறும். கல்லுாரி மாணவிகளுக்கு 16.09.2024 அன்று கால்பந்து, 17.09.2024 அன்று கபாடி, 18.09.2024 அன்று கையுந்துப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறும்.

பொதுப்பிரிவு மாணவ, மாணவிகளுக்கான கபாடி போட்டி 18.09.2024 அன்றும், கிரிக்கெட் போட்டி 18.09.2024 மற்றும் 19.09.2024 ஆகிய தேதிகளிலும், இறகுப்பந்து மற்றும் கையுந்துப்பந்து ஆகிய போட்டிகள் 19.09.2024-ஆம் தேதியும், கால்பந்து போட்டி 19.9.2024 மற்றும் 20.09.2024 ஆகிய தேதிகளிலும், கேரம் போட்டி 20.09.2024 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.

அரசு ஊழியர்களுக்கான(ஆண்கள் மற்றும் பெண்கள்) தடகளம், இறகுப்பந்து, கையுந்துப்பந்து, கபாடி, கேரம், சதுரங்கம் ஆகிய போட்டிகள் 20.09.2024 அன்று நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கான(ஆண்கள் மற்றும் பெண்கள்) தடகளம், இறகுப்பந்து, சக்கரநாற்காலி, மேஜைப்பந்து, கையுந்துப்பந்து, எறிப்பந்து, கபாடி ஆகிய போட்டிகள் 23.09.2024 அன்று நடைபெறும்.

தளகளம், நீச்சல், கபாடி, ஹாக்கி, சதுரங்கம், கால்பந்து, கையுந்துபந்து, கோ-கோ, பொதுப்பிரிவினருக்கான கேரம், மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள், அரசு ஊழியர்களுக்கான போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்திலும், மேஜைப்பந்து, இறகுப்பந்து, சிலம்பம், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான கேரம் ஆகிய போட்டிகள் உள்விளையாட்டரங்கத்திலும், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்திலும், கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் ஆர்விஎஸ் கல்லுாரி, ஜிடிஎன் கல்லுாரி மைதானங்களிலும், கைப்பந்து சின்னாளப்பட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை, மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல்-624004 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி எண் 7401703504 வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.