Cable TV Operators Meeting(Election)

Publish Date : 13/03/2019

செ.வெ.எண்:- 17/2019 நாள்:- 13.03.2019
திண்டுக்கல் மாவட்டம்

நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைதேர்தலை முன்னிட்டு அனைத்து நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், ரேடியோ (FM) மற்றும் உள்ளுர் தொலைக்காட்சிகளில்; தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வெளியிடுவதற்கு ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழுவிடம் (Media Certification Monitoring Committee) முன் அனுமதி பெற வேண்டும் – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,இ.ஆ.ப.,அவர்கள் தகவல்

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைதேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நாளிதழ்கள், உள்ளுர் தொலைக்காட்சிகள் மற்றும் ரேடியோ (FM) ஆகியவற்றில் தேர்தல் தொடர்பான அரசியல் விளம்பரங்கள், அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் பிரச்சார விளம்பரங்கள் ஆகியவற்றை அனுமதியின்றி வெளியிடவும், ஒளிபரப்பவும் இந்திய தேர்தல் ஆணையத்தால் தடை செய்யபட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாளிதழ்கள்,உள்ளுர் தொலைக்காட்சிகள் மற்றும் ரேடியோ (FM) அகியவற்றில் ஒளிபரப்பு செய்வதற்கு, முன் அனுமதி வழங்குவதற்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழுவில் MCMC (Media Certification Monitoring Committee) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைவராகவும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர், தூர்தர்ஷன் முதன்நிலை நிருபர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழு MCMC (Media Certification Monitoring Committee) அனைத்து நாளிதழ்களில் வெளிவரும் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள், உள்ளுர் தொலைக்காட்சி ஒளிப்பரப்பப்படும் தேர்தல் தொடர்பன விளம்பரங்கள்; கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள், தேர்தல் தொடர்பான விளம்பரங்களை நாளிதழ்கள் மற்றும் உள்ளுர் தொலைக்காட்சிகளில் வெளியிடுவதற்கு, ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழுவிடம் MCMC (Media Certification Monitoring Committee) முன் அனுமதி சான்றிதழ் பெற்று தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடலாம்.

முன் அனுமதி சான்றிதழ் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊடகங்கள் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவிற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்யும் பொழுது தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப உள்ள வீடியோ தொகுப்பின் CD வழங்க வேண்டும். வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ள காட்சிகள் ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழு MCMC (Media Certification Monitoring Committee) மூலம் பார்வையிட்டு விதிமீறல் உள்ளதா என ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படும்.

இதே போன்று, அரசியல் கட்சிகள் நாளிதழ்களில் வெளியிடப்படும் விளம்பர மாதிரிகளை ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழுவிடம் MCMC (Media Certification Monitoring Committee)சமர்பித்து முன் அனுமதி சான்றிதழ் பெற வேண்டும். இக்குழுவின் பரிசீலனைக்கு பின், விதிமீறல் உள்ளதா என ஆய்வு செய்து 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்கப்படும்.

எனவே, நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைதேர்தலை முன்னிட்டு அனைத்து நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், ரேடியோ (FM) மற்றும் உள்ளுர் தொலைக்காட்சிகள் நிறுவனங்கள் நடத்தை விதிமுறைகளை கருத்தில் கொண்டு, தேர்தல் நடைமுறைகளை கடைபிடித்து வருகின்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைதேர்தலை சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்