Close

Canara bank – CSR Contribution

Publish Date : 01/02/2024
.

செ.வெ.எண்:-66/2024

நாள்:-29.01.2024

திண்டுக்கல் மாவட்டம்

கனரா வங்கியின் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து சுகாதாரப்பணிகள் துறைக்கு வழங்கப்பட்ட ரூ.2.25 இலட்சம் மதிப்பிலான 5 கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(29.01.2024) கனரா வங்கி மண்டல அலுவலகம் சார்பில் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து சுகாதாரப்பணிகள் துறைக்கு வழங்கப்பட்ட 5 கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் கனரா வங்கி மண்டல அலுவலகம் சார்பில் கனரா வங்கியின் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து சுகாதாரப்பணிகள் துறைக்கு வழங்கப்பட்ட ரூ.2.25 இலட்சம் மதிப்பிலான 5 கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர்(சுகாதாரப் பணிகள்) மரு.வரதராஜனிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, கனரா வங்கி மண்டல பொது மேலாளர் திரு.பல்லானி ரங்கநாத், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.அருணாச்சலம், கனராவங்கி வட்ட மேலாளர் திரு.சதீஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.