Close

Chennai Town Panchayat Commissioner Inspection

Publish Date : 16/05/2022
.

செ.வெ.எண்:-22/2022

நாள்: 13.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பேரூராட்சி பகுதிகளில் சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர் இரா.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில், நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர், அகரம் உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், திரவக்கழிவு மேலாண்மை மற்றும் திட்ட பணிகள் குறித்து சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர் இரா.செல்வராஜ்.இ.ஆ.ப., அவர்கள் இன்று(13.05.2022) நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அகரம் பேரூராட்சியில் 15வது நிதி குழு மான்யம் திட்டத்தில் ரூ.18.00 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் குளம் மேம்பாட்டு பணிகள் மற்றும் வளமீட்பு பூங்கா ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், வேடசந்தூர் பேரூராட்சியில் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிடம், திரவ கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வளமீட்பு பூங்கா ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, தாடிக்கொம்பு பேரூராட்சியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்புற சாலைகள் அடிப்படை கட்டமைப்பு திட்டம், 2021-22ன்கீழ் மேற்கொள்ளப்பட்ட சாலைபணி, வளமீட்பு பூங்கா மற்றும் சமுதாயகூடம் ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும், அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் வளமீட்பு பூங்காவினையும், நிலக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட கொங்கர் குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தினையும், வத்தலக்குண்டு பேரூராட்சி வளமீட்பு பூங்காவிலும் ஆய்வு மேற்கொண்டார். பேரூராட்சி பகுதியில் மேற்கொண்டு வரும் பணிகளை தரமானதாகவும், குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்த ஆய்வின் போது, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருமதி.மனோரஞ்சிதம், மதுரை மண்டல பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் திரு.ரெ.செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் திரு.அ.இசக்கி, உதவி பொறியாளர்கள், உதவி பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.