Close

Chess Competition

Publish Date : 25/07/2022
.

செ.வெ.எண்:-72/2022

நாள்:23.07.2022

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்கில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சார்ந்த 288 மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் விளையாட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது.

44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 விளையாட்டு போட்டிகள் ஜீலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 விளையாட்டு போட்டிகளில் 188 நாடுகள் பங்கு பெறுகிறது. இப்போட்டிகளில் சுமார் 2500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இதன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி அளவில் செஸ் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வட்டார அளவில் 6-8 வகுப்பு, 9-10 வகுப்பு, 11-12 வகுப்பு என 3 பிரிவுகளில் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது. இதில் வட்டார அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்கள் 9 நபர்களுகும், மாணவியர்கள் 9 நபர்கள் என 18 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 144 மாணவர்கள் மற்றும் 144 மாணவியர்கள் என 288 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட 288 மாணவ, மாணவியர்களுக்கு இன்று சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் செஸ் போட்டிகள் நடைபெற்றது. செஸ் போட்டிகளை கல்வித்துறையின் சார்பில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருமதி.ராஜதிலகம் அவர்கள் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் ஆகியோர் முன்னிலையில் இப்போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ, மாணவியர்கள் சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பார்வையிட கல்வித்துறையின் சார்பில் அழைத்துச்செல்லப்பட உள்ளனர்.

இப்போட்டி நடைபெறும் ராஜன் உள்விளையாட்டு அரங்கில் உடற்கல்வி இயக்குநர்கள் திரு.ரகுமத்கனி, திரு.பிச்சை, திரு.ராஜ்மோகன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மணிகண்டன், நாட்ராயன், முருகேசன் உட்பட பலர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.