Close

Chess Olympiad – Police Motor Cycle Awareness

Publish Date : 25/07/2022
.

செ.வெ.எண்:-67/2022

நாள்:23.07.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கலில் செஸ் ஒலிம்பியாட்-2022 விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையின் சார்பில் இருசக்கர வாகனத்தில் செஸ் பலகை வரைந்து, இரு சக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன் அவர்கள் இணைந்து துவக்கி வைத்தனர்.

திண்டுக்கலில் செஸ் ஒலிம்பியாட்-2022 விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையின் சார்பில் இருசக்கர வாகனத்தில் செஸ் பலகை வரைந்து, இரு சக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன் அவர்கள் இணைந்து இன்று (23.07.2022) துவக்கி வைத்தனர்.

சென்னை மாமல்லபுரத்தில் பல்வேறு உலக நாடுகள் பங்கேற்கும் செஸ் ஒளிம்பியாட் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் நடைபெறுவதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு செஸ் விளையாட்டு போட்டிகள், வினாடிவினா, மாராத்தான் ஓட்டம், வாகனங்களில் செஸ் விளையாட்டு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்;டுதல், மோட்டார் சைக்கிள் பேரணிகள், முதியோர் மற்றும் இளையோருக்கான செஸ் போட்டிகள், செஸ் ஒலிம்பியாட் மஞ்சப்பை வழங்குதல், ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பள்ளி, கல்லூரி பேருந்து அணிவகுப்பு, நீச்சல் குளத்தில் செஸ் விளையாட்டு போட்டிகள், ரங்கோலி கோலப்போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகளை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், இன்று திண்டுக்கலில்; செஸ் ஒலிம்பியாட்-2022 விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையின் சார்பில் இருசக்கர வாகனத்தில் செஸ் பலகை வரைந்து, இரு சக்கர வாகன பேரணி நடத்தப்பட்டுள்ளது. இரு சக்கர பேரணி கோட்டாட்சியர் அலுவலக பகுதியில் துவங்கி ஆர்த்தி தியேட்டர் ரோடு, பழனிசாலை, தாலுகா அலுவலக சாலை, பெரியகடை வீதி, ஆர்.எஸ் ரோடு, நத்தம் ரோடு, ஸ்கீம் ரோடு, ஏ.எம்.சி பேருந்து ரோடு வழியாக திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் முடிவுற்றது. இது பொதுமக்களுக்கும் செஸ் ஆர்வளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக நடத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கோகுலகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி ரோஸ் பாத்திமா மேரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சேரழாதன் மற்றும் காவல்துறையினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.