Close

Chess Olympiad – Torch Light

Publish Date : 26/07/2022

செ.வெ.எண்:-79/2022

நாள்:25.07.2022

திண்டுக்கல் மாவட்டம்

44-வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி வரவேற்பு விழா மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது

திண்டுக்கல் மாவட்டத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

சென்னை மாமல்லபுரத்தில் பல்வேறு உலக நாடுகள் பங்கேற்கும் செஸ் ஒளிம்பியாட் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது.

இப்போட்டிகள் நடைபெறுவதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்;டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு செஸ் விளையாட்டு போட்டிகள், வினாடிவினா, மாராத்தான் ஓட்டம், வாகனங்களில் செஸ் விளையாட்டு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்;டுதல், மோட்டார் சைக்கிள் பேரணிகள், முதியோர் மற்றும் இளையோருக்கான செஸ் போட்டிகள், செஸ் ஒலிம்பியாட் மஞ்சப்பை வழங்குதல், ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பள்ளி, கல்லூரி பேருந்து அணிவகுப்பு, நீச்சல் குளத்தில் செஸ் விளையாட்டு போட்டிகள், ரங்கோலி கோலப்போட்டி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் செஸ் விளையாட்டு தொடர்பாக உறுதி மொழி நிகழ்ச்சி, காவல்துறையின் சார்பில் இருசக்கர வாகனத்தில் செஸ் பலகை வரைந்து இரு சக்கரவாகன பேரணி, மனித சதுரங்க விளையாட்டு போட்டி, இரயில் நிலையத்தில் செஸ் விளையாட்டு போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், திண்டுக்கல் மாவட்டம், இன்று(25.07.2022) இரவு 8.30 மணிக்கு மதுரையிலிருந்து 44-வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களிடம் வழங்கப்பட்டு, விளையாட்டு வீரர்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு வங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட விளையாட்டு வீரர்கள், பல்பேறு விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

அதனை தொடர்ந்து 26.07.2022 அன்று காலை 09.00 மணிக்கு திண்டுக்கல் பைப்பாஸ் 4 வழிச்சாலை சந்திப்பில் விளையாட்டு வீராங்கனைகள் பொதுமக்களுடன் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஒட்டத்தினை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியும், காலை 09.10 மணிக்கு திண்டுக்கல் பேகம்பூh லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளி அருகில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி வரவேற்பு நிகழ்ச்சியும், காலை 09.20 மணிக்கு திண்டுக்கல் மாநகராட்சி நேருஜி மேல்நிலைப்பள்ளி பகுதியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி வரவேற்பு நிகழ்ச்சியும், காலை 09.25 மணிக்கு திண்டுக்கல் பழனி சாலை அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி வரவேற்பு நிகழ்ச்சியும், காலை 09.35 மணிக்கு திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி பகுதியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி வரவேற்பு நிகழ்ச்சியும், காலை 09.45 மணிக்கு திண்டுக்கல் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி பகுதியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி வரவேற்பு நிகழ்ச்சியும், காலை 09.55 மணிக்கு திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பகுதியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி வரவேற்பு நிகழ்ச்சியும், காலை 10.00 மணிக்கு திண்டுக்கல் எம்.எஸ்.பி சோலை நாடார் மேல்நிலைப்பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி வரவேற்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், மாவட்ட ஊராட்சித்தலைவர், மாநகராட்சி துணை மேயர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் மற்றும் உயர் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். இவ்விழாவில் சிலம்பாட்டம், யோகா மற்றும் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. விழா நிறைவில் 44-வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் இவ்விழாவில் பல்வேறு விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள், விளையாட்டு போட்டிகளில் மாநில, தேசிய மற்றும் மாவட்ட அளவில் பரிசுகள் பெற்ற வீரர்கள், வீராங்கனைகள், பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் 1000-க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.